இறைவனின் கருணையால்,
பூமி என்பது அண்டத்தில், பிரபஞ்சத்தில் இது ஒன்றுதான். இந்த பூமியை தவிர பூமி என்கின்ற நாமத்தில் வேறு எந்த கோள்களும் இந்த அண்டத்தில் இல்லை. ஆனால் மனிதர்களைப் போல் வாழக் கூடிய இனங்கள் வேறு எங்காவது உள்ளதா? என்றால் நிச்சயமாக உள்ளது என்பதுதான் எங்களின் பதிலாகும்.
இறைவன் படைத்த படைப்பை மதிக்காமல், மனிதர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு இயற்கையை சீண்டிக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கையை சீண்ட, சீண்ட, இயற்கையை அழிக்க, அழிக்க அதன் விளைவாக இயற்கை அக்னித் தன்மை உருவாகிறது. அவ்வாறு உருவான அக்னிக்கு பெயர் காயத்ரி. காயத்ரியை பூமியில் அதிகரிக்க மனிதர்களே உதவி செய்து வருகின்றார்கள் என்பதுதான் வருத்தம் தரக் கூடிய செய்தி. காயத்ரி என்ற அக்னி இப்பூமியில் இறங்கிவிட்டால் நிச்சயமாக மனிதர்களால் வாழ இயலாமல் போய்விடும். இப்பூமி வாழ்வதற்கு தகுதி இல்லாமல் மாறிவிடும் என்பது எங்களது பதில்.
பூமியை தவிர மனிதர்கள் வாழக் கூடிய வேறு கோள்கள் உள்ளதா? என்றால் இறைவனின் கருணையால் குறைந்த பட்சம் 14 கோள்கள் வேற்று அண்டத்தில் மனிதர்கள் வாழ முழுத் தகுதியுடன் இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. அந்த கோளில் மனிதர்கள் இங்கே வாழ்வது போல் அங்கேயும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனால் அங்கே மனிதர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இறைவன் நாமத்தை அனுதினமும் ஜெபம் செய்தும், சத்தியத்தையும், தர்மத்தையும் காத்து, இறைவன் மட்டும்தான் உண்மை, மற்றவர்கள் யாரும் உண்மையில்லை, மாயை என்று வாழ்ந்து வருகின்றார்கள்.
நான் யாரையும், எதற்காகவும், ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை. யாரிடமும் நயவஞ்சகமாக பொருள் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பூமியை போல் நவகோள்கள் ஆட்கொண்டு வேலை செய்து வருகின்றதா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்பது எங்கள் பதில்.
காரணம் அக்கோள்களில் மனிதர்கள் இறைவனைப் பற்றி சிந்தனை செய்து வாழ்ந்து வருவதால் அக்கோள்களுக்கு நவ கிரகங்கள் அவசியமில்லை. ஏனென்றால் இந்த பூமி இறைவனின் சிறைச் சாலை. பாவம் செய்தவர்கள் மட்டும்தான் இந்த பூமியில் தள்ளப் படுகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment