சித்தவித்தை

இறைவன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பாம்பாட்டி சித்தர், சித்தர் திருமூலர் கருணையால், அருளால் உபதேசிக்கப்பட்ட சித்தவித்தை உபதேசங்கள். சப்தரிஷிகளால் மானிடர்களுக்கு நேரடியாக உபதேசிக்கப்பட்ட கலைதான் சித்தவித்தை. இந்த உபதேசங்களை சித்தவித்தை அப்பியாசிகள் பயன்படுத்திக் கொள்ளவும், பயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆனால் மற்றவர்களுக்கு உபதேசமாக வழங்க எவ்வித அனுமதி கொடுக்கப்படவில்லை.

Thursday, 26 November 2015

சிதம்பர ரகசியம் என்றால் என்ன?


சிதம்பர ரகசியம்
                                                
     இறைவனின் கருணையால் இறைவனின் லோகத்தில் இருக்கக்கூடிய இறைவனின் ரகசிய ஓலைச் சுவடி கதவு திறந்து, இந்த தமிழ்நாட்டில் பிரதான சிவன் ஆலயங்கள் என்று பல ஆலயங்கள் உண்டு. ஆயினும் இந்த அண்ட சராசரத்தைக் காக்கும் ஆலயமாக இறைவனால் நிர்ணயக்கப்பட்டு விளங்குவது சிதம்பரம் நடராஜர் ஆலயமாகும்

    இந்த ஆலயத்தினுள்ளே சிதம்பர ரகசியம் என்று சொல்கின்ற ஒரு கருப்பு நிற இயந்திரத்தை மக்கள் கண்டிருப்பார்கள். ஆனால் அது சிதம்பர ரகசியம் இயந்திரம் இல்லை. அது காலபோக்கில் அங்கு ஒரு செப்பு தகடு, சிவாச்சாரியர்களால் எழுதப்பட்ட இயந்திரம் வைக்கப்பட்டுள்ளன. உண்மையான சிதம்பர ரகசியம் என்பது இறைவனின் அருளால் இப்போது நாங்கள் வெளிப்படுத்துகின்றோம் அல்லது அதற்கான காலகட்டம் வந்துவிட்டது என்பதால் இறைவன் அருளால் அந்த இரகசியத்தை வெளிபடுத்துகிறோம்

   இன்றைக்கு இருக்கக் கூடிய மானிடர்கள் நம்புவார்களாமாட்டார்களா? என்றால் அது இறைவனுக்கே வெளிச்சம். நடராஜர் சந்நிதி எங்கு கண்டுகொண்டிருக்கின்றீர்களோ அதற்கு நேர் கீழாக 27 அடி ஆழத்தில் ஸ்படிகத்தால் ஆன பல ஜோதி ஒளி மின்காந்தம் கற்கள் வைக்கப் பட்டுள்ளது. அந்த ஜோதி ஒளி மின்காந்தம் கல்லைச் சுற்றி ஒளி அலைகளை தாங்கிப்பிடிக்கக் கூடிய சில கற்களும் வைக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டும் இல்லாமல் ஒளி அலைகளை தாங்கி பிடிக்கக் கூடிய அந்த கற்கள், எவ்வாறு வேலை செய்யவேண்டும் என்றும் சில ரகசிய கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன. அந்த ரகசிய கருவிகளின் வேலை என்னென்றால் அது ஒவ்வொரு கோள்களையும் அதன் வட்டப்பாதையில் இருந்து கீழே விழாதபடி, மேலே செல்லாதபடி, ஒரே சீராக இயங்கும்படி கட்டளை தருவதுதான் அதன் சிறப்பு அம்சமாகும்.  

    அவ்வாறிருக்க அந்த பூமியை தாங்கிபிடிக்கக் கூடிய மற்றொரு ஸ்படிக ஜோதி ஒளி மின்காந்தம் கற்கள் மற்றும் அதனின் ரகசிய கருவிகள் சிவகாமி அம்மையின் பாதத்தில் இருந்து 27 அடிக்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதை குறிக்கத்தான் அங்கே சில வடிவங்கள் அதாவது கோலங்கள் நடராஜர் சந்நிதியின் எதிர்புறமும், சிவகாமி அம்மையின் நுழைவாயிலிலும் போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனின் அர்த்தம் புரியாமல் போனதால்தான் தமிழ்நாட்டில் உள்ள இந்த சிறப்பை மனிதர்கள் மறந்து, மேற்கத்திய கலாச்சாரம்தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகின்றார்கள்.

மேலும் புவியின் காந்த புலத்தின் மையம் நடராஜரின் கால் பாதத்தின் கீழ் அமைந்துள்ளதாக சமீபத்தில் நாசா அறிவித்தது. அந்த சிதம்பர ரகசியத்தை அவர்கள் அறிய லட்சம் வருடங்களாவது ஆகும். அதாவது மனிதன் இதை அறிய லட்சம் வருடங்கள் ஆனாலும் ஆகலாம்.

Tuesday, 24 November 2015

சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தர்கள் என்பவர்கள் யார்?   
    சித்தர்கள் என்பவர்கள்  குறைந்த பட்சம் 12 வருடம் நிஷ்டையில் அதாவது கண்களை திறந்து இறைவனின் ஓம்காரம் மௌனம் ஜோதியை தர்சித்து கொண்டு வாழ்ந்தவர்கள்தான் சித்தர்கள். இது மட்டும் சித்தர்கள் தன்மையை தந்துவிடுமா? என்றால் தந்துவிடாது.  

  மேலும் விந்துவை ரசமணியாக மாற்றி அந்த ரசமணியை குண்டலினியுடன் இணைத்து, அந்த குண்டலினியை சகஸ்ர லிங்கத்துடன் இணைத்து, அந்த சகஸ்ர லிங்கத்தை பிரம்ம ரந்திரத்துடன் இணைத்து, அந்த பிரம்ம ரந்திரத்தை வாசியுடன் இணைத்து வைத்திருப்பவனே சித்தனாவான். இந்த நிலைக்கு அல்லது ரகசியத்தின் பெயர்தான் சித் என்கின்ற எழுத்தின் ரகசியமாகும். சித்தன் என்று அழைக்கக்கூடிய அவனுக்கு வாசி ஆதாரம் பரிபூரணமாக அடங்கி இயங்காமல், அவன் எப்போது நினைக்கின்றனோ அப்போது இயங்கும் நிலைக்கு வந்துவிடும்.  

   எனவே சித் என்கின்ற ஒளியை, சித் என்கின்ற ஜோதி, சித் என்கின்ற ஜோதிஒளியை, சித் என்கின்ற மின் காந்த ஜோதி ஒளியை, சித் என்கின்ற மின் காந்த ஜோதி ஒளி தவ ஒளியை தனது வாசியில் பிராணபிரதிஷ்டை எவன் செய்கின்றானோ அவனே சித்தன். அந்த சித்தனிடம் வந்தால் நம் நோய்கள் சரியாகிவிடும் என்று கற்பனை கோட்டை கட்டி, அவனை நோக்கி வருகின்றார்கள்.  

    ஆனால் அந்த சித்தன் என்ன செய்வான்? அந்த சித்தன் இறைவனின் பித்தன், இறைவனின் பைத்தியம். இறைவனின் தவசி, இறைவனின் தூதுவன். அவன் இறைவனை நாடுவான், இறைவன் என்ன கூறுவார் மகனே அவன் பாவி, அவன் செய்த பாவங்களின் கர்மவினையை அனுபவிக்கும் காலகட்டம் இது என்றும், இல்லையென்றால் அந்த பாவத்திற்காக அவன் மீண்டும் பிறவியெடுப்பான் என்றும் இறைவன் கூறுவார்.  

    ஆனால் மனிதர்களோ நான் நன்றாக இருக்க வேண்டும். எனது ஆசை அனைத்தும் நிறைவேற வேண்டும், நான் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நான் நிறைய சம்பாதிக்கவேண்டும் என்றும் மிக பெரிய வீடு, கார் வேண்டுமென்றும் என்றும், இன்னும் நிறைய வேண்டுமென்றும், நிறைய நல்லதை மட்டும் கேட்பார்களே தவிர கஷ்டங்களோ அல்லது நான் இந்த பிறவியோடு நான் செய்த கர்மவினைகளை அனுவிபத்து முடித்து விடுகின்றேன் இறைவா என்று யாரும் கேட்பதில்லை.  

     சித்தர் தவ பீடம் என்பது மனிதர்களின் பிரச்சனைக்கு தீர்வு தரும் என்றாலும் மனிதனின் கர்மவினை ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதால் அந்த கர்மவினையை முழுமையாக அகற்றதான் நாங்கள் முயற்சி செய்வோம். ஒரு மனிதன் இயற்கையாக கர்மவினைகளை அழிக்க முடிவு செய்தானென்றால் அவன் இந்த பூமியில் உள்ள சிவன் ஆலயங்களுக்கு பாத யாத்திரையாக நடந்து செல்ல வேண்டும்.  

     அவ்வாறு செல்லுவதால் என்ன நன்மை நிகழ்கின்றதென்றால், அவன் நடந்துச்செல்லும் போது பல இன்னல்களையும், துன்பங்களையும், கஷ்டங்களையும், பல இயற்கை உபாதைகளையும் சந்திப்பான். அதனால் அவனின் பாவங்கள் குறையும். இவ்வாறு அவன் பல ஆலயங்கள் செல்லச்செல்ல அவனின் பாவங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு சிவாலயத்தில் முழுமையாக எரிக்கப்பட்டுவிடும்

   இதற்காகதான் நாங்கள் மனிதர்களை குறைந்த பட்சம் 108 அல்லது 1008 சிவாலயங்கள் என்று ஸ்தல யாத்திரை மூலம் செல்லுங்கள் என்று கூறுகின்றோம். ஆனால் மனிதர்கள் படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற கருத்துக்கேற்ப படிப்பது திருமுறை, படிப்பது தேவாரம், படிப்பது சிவபுராணம் என்று சொல்லிக் கொண்டு சிவாலயங்களுக்கு செய்யக்கூடிய தொண்டுகளை மறந்து விட்டார்கள்.  

   அதனால் தான் மனிதர்கள் சிவாலயங்கள் சென்று என்ன செய்ய வேண்டும் என்று மறந்துவிட்டார்கள். அதை இப்போது உரைக்கின்றோம். ஒரு மனிதர் சிவாலயம் செல்லும் போது அன்று அந்த மனிதனின் ஜென்ம நட்சத்திரமாக இருக்கவேண்டும். காரணம் அந்த மனிதன் செல்லும் எந்த சிவாலயமாக இருந்தாலும் அந்த மனிதனின் ஜென்ம நட்சத்திரத்துடன் அந்த சிவாலயத்தில் உள்ள லிங்கம் இணைய ஆரம்பிக்கும். அவ்வாறு இணையும் போது அந்த மனிதன் அந்த லிங்கத்தை பார்த்து

   உதாரணமாக தனக்கு ஆரோக்கியம் தேவை என்றால் அவன் என்ன கேட்கவேண்டும்? ஆரோக்கியமான உயிர், உடல் தவஒளி எனக்கு வேண்டும் என்று கேட்கவேண்டும். அவனுக்கு எத்தனை முறை கேட்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படும்? அதற்கு குறைந்தபட்சம் 1008 முறை, அதிகபட்சம் லட்சத்து எட்டு முறை கேட்கவேண்டும் என்பது எங்களின் பதில். வழிதான் எங்களால் காட்டமுடியுமே தவிர முயற்சி அவன் அவனுடையது.