சித்தர்
காகபுஜண்டர்:
சித்தனுக்கெல்லாம்
சித்தன் என்று சித்தர்லோகத்தில் போற்றக்கூடிய மாபெரும் சித்தர் அவதாரம் காகபுஜண்டர்.
காகபுஜண்டருக்கு ஈடுயிணை இல்லாத சித்தன் என்ற பெருமையுண்டு. ஏனென்றால் வசிஷ்ட மகரிஷியால் சித்தர் திருமூலர் உருவானார். மற்ற ஏனைய ரிஷிகளால்
சித்தவித்தை உபதேசம் பெற்ற மாணவன்தான்
காகபுஜண்டர். ஆறு ரிஷிகளிடமிருந்து சித்தவித்தையை
உபதேசமாக பெற்று இந்த பூமியிலுள்ள அனைத்து இடங்களிலும் கடும்தவம் புரிந்து,
இறைவனை பார்க்க வேண்டுமென்றால் உடனடியாக பார்க்க்க்கூடிய ஒரு வரத்தையும்
பெற்றுள்ளதால் சித்தர் திருமூலரை காட்டிலும் காகபுஜண்டர் ஒரு மிகபெரிய சித்தர் அவதாரம்
என்று சித்தர் லோகத்தில் கூறுகின்றார்கள்.
ஆயினும் பிரதான சித்தர்,
சித்தர் திருமூலர். அவரின் தலைமையின் கீழ்தான்
உள்ளார் என்பது உண்மை. இறைவனை ஒரு சித்தர் பார்க்கவேண்டும் என்றால்
அதற்கு பல வழிமுறைகள் உள்ளது. கடும்தவம் மேற்கொள்ள வேண்டும் என்ற
நியதி உண்டு. ஆனால் இந்த நியதி எதுவுமில்லாமல் இறைவனை நேரடியாக
காணும் வரத்தை இன்று வரை சித்தர் காகபுஜண்டர் ஒருவர் மட்டுமே பெற்று உள்ளார்.
வேறு எந்த சித்தருக்கும் கொடுக்கப் படவில்லை.
அந்த
சித்தர் காகபுஜண்டர் அன்னை பகுளாதேவியுடன் இந்த பூமியில் இன்று மனிதர்களால் திருச்செந்தூர்
என்று அழைக்கப்படும்
ஊரில் மானிட ரூபம் எடுத்து, எனக்காக ஒரு மானிடன் இந்த பூமியிலிருக்க
வேண்டும் என்று ஆசைப்பட்டு, விருப்பப்பட்டு, பகுளாதேவி அன்னையின் மூலமாக பூமியில் பிறந்தவர்தான் சந்திரசுவாமியாவர்.
மேலும் உரோமரிஷி, தனது குருகுல பீடத்தை திருச்செந்தூர்
முருகன் ஆலயத்தில் கலியுகம் ஆரம்பிக்கும் முன்னரே உருவாக்கி வைத்திருந்தார்.
அன்னை பகுளாதேவி, சந்திரசுவாமியை உரோமரிஷி
குருகுல பீடத்தில் கலியுகம் ஆரம்பிக்கும் முன் சேர்த்துவிடுகின்றார். அப்பேர்ப்பட்ட சந்திர சுவாமி மானிட ஜென்மாக பிறந்தால் இன்னும் சொல்லப்போனால்
சித்தர் காகபுஜண்டர் அன்னை பகுளாதேவி இருவரும் அவரை சித்தர் லோகம் வரவேண்டும் என்று
ஆசிர்வாதம் செய்தார்கள், ஆனால் எந்த பிறவியில் வரவேண்டும் என்று
ஆசிர்வாதம் மட்டும் செய்யாமல் சென்று விட்டார்கள். அதன் பயனாக
இன்னும் சொல்லப்போனால் இது இறைவனின் திருவிளையாடலாக இருக்கலாம் என்று கூறி,
அப்பேர்ப்பட்ட மாபெரும் சித்தரின் மகனாக பிறந்தவர்தான் சந்திரசுவாமி.
எனவே இன்றைக்கும் காகபுஜண்டரின், பகுளாதேவியின்
தவ வலிமையும், தவ பார்வையும் தவ ஜோதிலிங்கமும் சந்திர சுவாமி
என்ற விஜயகுமாரை சுற்றி காவல் காத்துக் கொண்டு வருகின்றது என்பது ஒர் உண்மை மிகபெரிய
மெய்யான விஷயமாகும். எனவே அப்பேர்பட்ட சித்தரிடமிருந்து தோன்றியவர்
சந்திரசுவாமி என்றாலும் மனிதரூபமாக இருப்பதால் பிற மனிதர்கள் போல் ஆசைப்பட்டு,
வாழ்ந்ததால் இத்தனை பிறவிகள் வந்தது. இதில் இதை
மட்டும் கூறிப்பிட்டால் போதும் ஆனது. மற்ற விஷயங்கள் மேல் நிலை
உபதேசம் அல்லது திருமூலர் திருமந்திரத்தில் கூறிப்பிடுவோம் என்று கூறி முடிக்கின்றோம்
பெரும் சித்தர்களான அகத்தியர் காகபுசுண்டர் இடைக்காடர் இம்மூவரும் திருவள்ளுவரை பற்றி பாடியுள்ளனர் மேலும் மாமூலனார் திருவள்ளுவர் பற்றி பாடியுள்ளார் மாமூலனார் காலம் கி.மு 355 என்று பல சான்றுகள் கூறுகின்றன ஆக திருவள்ளுவர் இவருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்ப வாழந்திருக்கலாம் மேலும் இடைக்காடர் கடுகை துளைத்து ஏழ்கடல் புகுத்தி என்று கூறுகிறார் ஆனால் அவ்வையாரோ அணுவை துளைத்து ஏழ்கடல் புகுத்தி என்று கூறுகிறார் அப்படியென்றால் இடைக்காடர் காலத்தில் அணு என்ற சிறிய முலக்கூறு பற்றி தெரியவில்லை ஆக இடைக்காடர் அவ்வையாரை விட வயதில் மூத்தவர் என்று தெரியவருகிறது ஆக திருவள்ளுவரின் காலம் கி.மு 600க்கு முன்பாக இருக்க 100 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது
ReplyDeleteஅருமை
ReplyDelete