சித்தவித்தை

இறைவன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பாம்பாட்டி சித்தர், சித்தர் திருமூலர் கருணையால், அருளால் உபதேசிக்கப்பட்ட சித்தவித்தை உபதேசங்கள். சப்தரிஷிகளால் மானிடர்களுக்கு நேரடியாக உபதேசிக்கப்பட்ட கலைதான் சித்தவித்தை. இந்த உபதேசங்களை சித்தவித்தை அப்பியாசிகள் பயன்படுத்திக் கொள்ளவும், பயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆனால் மற்றவர்களுக்கு உபதேசமாக வழங்க எவ்வித அனுமதி கொடுக்கப்படவில்லை.

Wednesday, 23 September 2015

சித்தவித்தை

சித்தவித்தையின் ஆதிகுரு ஸ்ரீலஸ்ரீ ஆஞ்சிநேயரின் திருவடிகளை வணங்கி
குருநாதர் ஸ்ரீலஸ்ரீ பாம்பாட்டி சித்தரின் திருவடிகளை வணங்கி
குருநாதர் ஸ்ரீலஸ்ரீ திருமூலர் சித்தரின் திருவடிகளை வணங்கி
சித்தவித்தையின் அடிப்படை உபதேசங்களை வழங்குகின்றோம்
அணு சித்தவித்தை குருநூல் வேதம் என்ற நூலில் கொடுக்கப்பட்ட உபதேசங்களை இங்கு பதிவிடுகின்றோம். முதலில் குருநாதர்களை பற்றி பார்ப்போம் 

குருநாதர் பாம்பாட்டி சித்தர்

    பாம்பாட்டி சித்தர் துவாபார யுகத்தில் தோன்றியிருந்தாலும், அப்போது பாம்பாட்டி சித்தர், இறைவனின் கடும்தவம் அதிகளவில் செய்யவில்லை என்றாலும் இறைவனின் நாமத்தை பரிபூரணமாக பெற்ற ஓர் அவதாரமாகதான் தோன்றியிருந்தார். இதை அறிந்த வசிஷ்ட மகரிஷி, பலராமருக்கு சித்த வித்தையை உபதேசம் செய்யும்படி பாம்பாட்டி சித்தருக்கு கட்டளை இடுகின்றார். அக்கட்டளைக்கேற்ப பலராமரை சித்தர் என்னும் நிலைக்கு எடுத்துச் செல்கின்றார் பாம்பாட்டி சித்தர்.  

   அப்பேர்ப்பட்ட பாம்பாட்டி சித்தர் இமயமலையில் உள்ள கைலாய மலையில் குறைந்தபட்சம் 108 வருடங்கள் கடும் தவம் புரிந்தார். 108 வருடம் கடும் தவம் புரிந்த பிறகு கேதர்நாத் என்ற மலையில், கேதர்நாத் பாபாஜி ஜோதிர்லிங்கம் எங்குள்ளதோ, அவ்விடத்தில் 108 வருடங்கள் கடும் தவம் புரிந்துள்ளார். அதன்பின்னர் காசி என்று மக்களால் அழைக்கப்படும் காசி விஸ்வநாதர் ஆலயம், அந்த ஆலயத்தில் காசி விஸ்வநாதர் சிவலிங்கம் எங்குள்ளதோ அந்த இடத்தில் 108 வருடங்கள் கடும்தவம் புரிந்துள்ளார்.

   இந்த மூன்று 108 வருடங்கள் அதாவது 324 வருடங்கள் தவம் முடித்த பிறகு பாம்பாட்டி சித்தர் அமர்ந்த முதல் ஜீவசமாதி இடம்தான் ஹரித்துவாரிலுள்ள இன்று மக்கள் வழிபடும் ஆலயமான மானசாதேவி ஆலயம். இன்னும் சொல்லப்போனால் அந்த ஹரித்துவார் புண்ணிய ஸ்தலமாக மாறுவதற்கு காரணம் பாம்பாட்டி சித்தரையே சாரும் என்பது சித்தர் லோகம் மறுக்கமுடியாத ஒர் உண்மையாகும்

    மானிடர்களின் அறிவுக்கு, இன்றைய போலி குருமார்கள், போலி சித்தவித்தை அப்பியாசிகளின் அறிவுக்கு எட்டாமல் போனதால், நாங்கள் பாம்பாட்டி சித்தரின் நேரடி சீடர் என்பதால் இந்த பெருமையை இவ்வுலகத்திற்கு பறைசாற்றுகின்றோம். பாம்பாட்டி சித்தர் முதல் ஜீவசமாதிக்கு பிறகு இந்த பூமியில் மீண்டும் மானிட ரூபம் எடுக்க வேண்டுமென இறைவனை நோக்கி 18 வருடங்கள் கடும்தவம் புரிந்தார். அத்தவத்தின் பயனாக இறைவனும் மானிட ரூபம் கொடுக்கின்றார். அவ்வாறு அடைந்த பின்னர் பாரத தேசத்தின் வடக்குப் பகுதியில் யாம் செய்ய வேண்டியதை செய்துவிட்டோம்.

   இனி தெற்கு பகுதியில் சித்தவித்தை குறித்து விழிப்புணர்வும், உபதேசமும் கொடுக்கவேண்டும் என அப்போதைய குமரிகண்டத்திற்கும், தற்போதைய தமிழ்நாட்டிற்கும் சித்தர் லோகத்திலிருந்து அடிக்கடி வந்துசென்று கொண்டிருந்தார். இவ்வாறு பல அவதாரங்கள் நிகழ்ந்தது, இதனால் பாம்பாட்டி சித்தரின் பல ஜீவசமாதிகள் உண்டாயிற்று. இவ்வாறு காலம் செல்லச் செல்ல, இறைவனின் கட்டளைக்கேற்ப சந்திரசுவாமிக்கு சித்தவித்தை உபதேசம் செய்து சித்தராக மாற்ற பாம்பாட்டி சித்தர் குற்றாலம் செண்பகா தேவி கோவிலுக்கு வருகின்றார்

   பாம்பாட்டி சித்தரின் 9-வது நேரடி சீடனாக சந்திரசுவாமியை மாறுகிறார். அதாவது முதல் சீடர் பலராமராவர். மற்ற ஏழு சீடர்களை பற்றி காலம் உணர்த்தும். இந்த 9 சீடர்களில் சிவபிரபாகர சித்தயோகி இல்லையென்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். இன்னும் சொல்லப்போனால் இந்த சிவபிரபாகர சித்தயோகி ஒரு சில கால சுழல்நிலைக்காகவும், சில குறிப்பிட்ட உபதேசங்களுக்காக சிவபிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரின் சீடனாக வரலாம். ஆனால் பாம்பாட்டி சித்தரிடம் சித்தவித்தையை உபதேசமாக இவர் பெறவில்லை என்பதுதான் பாம்பாட்டி சித்தரின் நேரடி கருத்தாகும்

    சந்திரசுவாமி சித்தவித்தையை சிவபிரபாகர சித்தயோகிக்கு கற்று தந்தார் என்பதை இங்கு தெளிவு படுத்துகின்றோம். மேலும் சித்தவித்தையை யார் பெற்றாலும் அவர் சித்தன் ஆகிவிடமுடியாது. காரணம் சித்தர் மார்க்கத்தில் சித்தவித்தை ஒரு பாடம்தானே தவிர சித்தராவதற்கு என்னென்ன நெறிமுறை என்றால் சித்தவித்தை முடிந்த பின் ஜீவசமாதி வித்தை உண்டு. ஜீவசமாதி முடிந்த பின் ஓம்கார மௌன வித்தை உண்டு. அதுமுடிந்த பின்னர் சித்தலோகம் வித்தை உண்டு, சித்தலோகம் வித்தை முடிந்த பின்னர் இறைவன்லோகம் வித்தை உண்டு. இறைவன்லோகம் வித்தை முடிந்த பின் ஆதிலோகம் வித்தை உண்டு. அதன்பின் பஞ்சபூதம் வித்தை உண்டு. எனவே இந்த பாடங்களை எல்லாம் யார் ஒருவர் முடிக்கின்றானா? அவனே சித்தர் என்ற நாமத்திற்கும், சித்தன் என்று கூறிக்கொள்ள தகுதியானவன் என்பதை இந்த சித்தவித்தை குருநூலில் வெளியிட அனைத்து சித்தர்களும் ஆர்வமாகயுள்ளார்கள்

   ஏனென்றால் இன்றைக்கு ஒரு மானிடர் கூறுகின்றான் குரு என்பவர் என்னுள்ளே இருக்கின்றான் என்பது மிகப்பெரிய பொய்யான கருத்தாகும். இதுபோன்று பொய் பிரசாரம் செய்பவனுக்கு கடுமையான சாபங்களும், கடுமையான பாவங்கள், கடுமையான தோசங்கள், கடுமையான துன்பங்கள் தட்சணாமூர்த்தியின் லோகத்திலிருந்து அதாவது இறைவன் லோகத்திலிருந்து நிச்சயமாக கொடுக்கப்படும் என்பதை இத்தருணத்தில் கூறுகின்றோம். காரணம் குரு, இறைவனின் தூதுவன் அல்லது இறை பார்த்து கொடுக்கும் நிலைதான் குரு. அதைவிட்டு விட்டு பொருள் சம்பாதிப்பதற்காக, சொத்து சேர்பதற்காக குரு செயல்படுவதில்லை. ஆனால் குருவிடமிருந்து எதையும் இலவசமாக பெறக்கூடாது என்பது நியதியாகும். எனவே குருவுக்கு சேவை செய்ய வேண்டும். குருவிற்கு தேவையானவைகளை கொடுத்து, குருவிடமிருந்து வாங்கவேண்டும் என்பதுதான் நியதி. ஆனால் மானிடர்கள் இதையெல்லாம் பின்பற்றாமல் போனதன் காரணம்தான் கலியுகம் ஆரம்பித்து இன்றுவரை, கலியுகம் முடியும் காலம் நெருங்கி கொண்டு இருப்பதாலும் மானிடர்களுக்கு ஆன்மீகம் என்றால் என்ன? குரு என்றால் என்ன? என்பதே தெரியாமல் போய்விட்டது.
 

3 comments: