சித்தவித்தை

இறைவன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பாம்பாட்டி சித்தர், சித்தர் திருமூலர் கருணையால், அருளால் உபதேசிக்கப்பட்ட சித்தவித்தை உபதேசங்கள். சப்தரிஷிகளால் மானிடர்களுக்கு நேரடியாக உபதேசிக்கப்பட்ட கலைதான் சித்தவித்தை. இந்த உபதேசங்களை சித்தவித்தை அப்பியாசிகள் பயன்படுத்திக் கொள்ளவும், பயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆனால் மற்றவர்களுக்கு உபதேசமாக வழங்க எவ்வித அனுமதி கொடுக்கப்படவில்லை.

Wednesday, 30 September 2015

சித்தர் திருமூலர்


குரு நாதர் சித்தர் திருமூலர் : 

   சப்த ரிஷிகள் தாம் பெற்ற சித்த வித்தையை மானிடர்களுக்கு உபதேசம் செய்ய விருப்பப் பட்டு, அதில் வசிஷ்ட மகரிஷி என்ற ஞான குரு, ஞான குரு சித்தர், ஞான குரு யோகி, ஞான குரு முனிவர், ஞான குரு தவசி என்கின்ற நிலையிலுள்ள மாபெரும் மகாத்மா, மானிடனை சித்தனாக மாற்ற வேண்டுமென எண்ணி சித்தவித்தையை உபதேசமாக பெற்ற முதல் மனிதர்தான் திருமூலர்.
 
   அந்த திருமூலர் பிறந்த ஊர் தமிழ்நாட்டில் எங்குள்ளதென்றால், சிதம்பரம் என்ற ஊரிலுள்ள தில்லை காளி ஆலயம்தான். அதாவது அந்த ஆலயம்தான் திருமூலர் பிறந்த இடம், பிறந்த வீடு, பிறந்த ஊர் என்று வைத்துக் கொள்ளலாம். அப்பேர்பட்ட திருமூலர் பிறந்த இடம்தான் இன்றைக்கு தில்லைகாளி ஆலயமாக மாறியுள்ளது. அங்கே சித்தர் திருமூலரின் சித்த வித்தை உபதேசம் பீடம் கண் திறந்து இன்றைக்கும் வேலை செய்துகொண்டு வருகின்றது என்பதுதான் உண்மை.  

   இதுவும் ரகசியம் என்றாலும் இந்த அற்ப மானிடர்களுக்காக எவ்வளவு ரகசியங்களை மறைத்துக் கொண்டுவருவது என்று இறைவன் கவலைப் படுகின்றார். ஏனென்றால் ஆன்மீக விஷயத்தை, இறைவனின் ரகசியத்தை வெளிப்படுத்தினால், இன்றைக்கு மானிடர்கள் அந்த ரகசியத்தை வைத்து பொருள் சம்பாதிப்பதையை குறிகோளாய் கொண்டுள்ளதால் இந்த மானிடர்களை நம்பி எந்த ரகசியத்தையும் நாங்கள் கொடுக்க விருப்பபடவில்லை என்கின்றார் இறைவன். மேலும் அப்பேர்ப்பட்ட சித்தர் திருமூலரை பற்றி இந்த குரு நூலில் நிச்சயமாக குறிப்பிடவேண்டும்
   
   வசிஷ்ட மகரிஷியிடமிருந்து சித்தவித்தை அப்பியாசம் பெற்று, சித்தன் நிலையை அடைந்து இன்றைக்கு மானிடர்கள் கூறுகின்ற சதுரகிரி மலையிலும் மேலும் திருவண்ணாமலையிலும் பல நூறு வருடங்கள் கடும் தவம் இயற்றியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் சதுரகிரி மலையில் அவர் தவம் செய்த இடம் இன்றைக்கு மனிதர்களால் தவசிபாறை என்று அழைக்கப்படும் இடம். அந்த தவசிபாறை கோரக்கரின் இடம் மட்டுமல்ல திருமூலரின் இடமும்தான் என்றும் கோரக்கர் சித்தருக்கு முன்பாகவே திருமூலர் தோன்றியுள்ளார் என்பது இயற்கையின் கால சக்கரத்தின் குறிப்பாகும்.
  
   திருமூலர் தவசி பாறையில் குறைந்தபட்சம் 250 வருடம் கடும்தவம் புரிந்தார். அந்த தவத்தை முடித்து விட்டு அவர் அடுத்து அமர்ந்த இடம் தான் திருவண்ணாமலை. அந்த திருவண்ணமலையில் இன்றைக்கு கார்த்திகை தீபம் ஏற்றுகின்ற இடத்தில் ஒரு குகை இருந்தது. அந்த குகை காலபோக்கில் நிலச் சரிவால் மறைந்துவிட்டது. இன்றைக்கு கார்த்திகை தீபம் ஏற்றுகின்ற இடம்தான் திருமூலரின் அக்னி தவ பீடமாகும். அந்த இடத்தில் அக்னியை சுற்றி வைத்துக் கொண்டு கடும் தவம் புரிந்தார். குறைந்த பட்சம் 18 வருடங்கள் தவம் புரிந்தார் திருமூலர்.

  இந்த இரு இடங்களில் தவம் புரிந்த சித்தர் திருமூலர் இறைவனின் அருளோடு தனக்கென ஒரு லோகத்தை உருவாக்கி, அந்த லோகத்தில்தான் இன்றைக்கும் திருமூலரும், அவரின் பிரதான சீடரான காலாங்கி நாதர், போகர், சந்திரசுவாமி, புலிப்பாணி, உரோம ரிஷி, இன்னும் எண்ணற்ற மகான்களும், யோகிகளும், ஞானிகளும், சித்த புருஷர்களும் அந்த லோகத்திற்கு சென்று சித்தர் திருமூலரிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக பல ஆண்டுகள் தவம் இருக்கும்போது, அத்தவமிருக்கும் சமயத்தில் சித்தர் திருமூலர் தோன்றி அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்துவருகின்றார். எனவே இந்த கருத்தை சித்த வித்தை குருநூலில் போட சித்தர் திருமூலரின் ஆசிர்வாதங்கள்.

சித்தர் பீடத்தில் சித்தவித்தை பயிற்சி எதிர்வரும் அக்டோபர் நான்காம் (04-10-15) தேதி சேலத்திலும், ஒன்பதாம் தேதி (09-10-15) சென்னையிலும் நடைபெறும்.

இடம்: பாம்பாட்டி சித்தர் குருகுலபீடம், 
33/4 இராமலிங்க நகர், பழைய சூரமங்கலம்,
சேலம்-5
BS2 Plot No:132, சுக்ரிதி அப்பார்ட்மெண்ட்,
சுந்தரம் தெரு, சின்மயா நகர் Stage I,
கோயம்பேடு பேருந்து நிலைய பின்புறம்,
சென்னை-92
தொடர்புக்கு: 94432 89816, 99520 01304, 97508 30031

Wednesday, 23 September 2015

சித்தவித்தை

சித்தவித்தையின் ஆதிகுரு ஸ்ரீலஸ்ரீ ஆஞ்சிநேயரின் திருவடிகளை வணங்கி
குருநாதர் ஸ்ரீலஸ்ரீ பாம்பாட்டி சித்தரின் திருவடிகளை வணங்கி
குருநாதர் ஸ்ரீலஸ்ரீ திருமூலர் சித்தரின் திருவடிகளை வணங்கி
சித்தவித்தையின் அடிப்படை உபதேசங்களை வழங்குகின்றோம்