சித்தவித்தை

இறைவன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பாம்பாட்டி சித்தர், சித்தர் திருமூலர் கருணையால், அருளால் உபதேசிக்கப்பட்ட சித்தவித்தை உபதேசங்கள். சப்தரிஷிகளால் மானிடர்களுக்கு நேரடியாக உபதேசிக்கப்பட்ட கலைதான் சித்தவித்தை. இந்த உபதேசங்களை சித்தவித்தை அப்பியாசிகள் பயன்படுத்திக் கொள்ளவும், பயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆனால் மற்றவர்களுக்கு உபதேசமாக வழங்க எவ்வித அனுமதி கொடுக்கப்படவில்லை.

Thursday, 17 December 2015

சதுர கிரி மலை - மனிதர்கள் அறியாத இரகசியங்கள்



சதுரகிரி மலை - சித்தவித்தை - சித்தர்கள் உள்ள தொடர்பு           
                                   
   சதுரகிரி என்ற மலையில் பல யுகங்களுக்கு முன்னர் அதாவது இராமாயணம் கால கட்டத்திற்கு முன்பாக அகத்தியர், கோரக்கர், சட்டைமுனி நாதர் இந்த மூன்று சித்தர்களும் ஒன்றாக இணைந்து சதுரிகிரி மலையின் வெவ்வேறு பகுதிகளில் கடும் தவத்தை மேற்கொண்டிருந்தார்கள்.  
     
   அவர்கள் தவமிருந்த இடம்தான் இன்று இன்னும் சொல்லப்போனால் சட்டைமுனி நாதர் கடும் தவமிருந்த இடம்தான் இரட்டை லிங்கமாகவும், அகத்தியர் கடும் தவமிருந்த இடம்தான் நாவல் ஊற்றாகாவும், கோரக்கர் கடும் தவமிருந்த இடம்தான் தவசி பாறையாகவும் காட்சி கொடுத்து வருகிறது. இந்த மூன்று இடங்களுக்கு ஓர் ஒற்றுமை உள்ளதப்பா
  
    அது என்னவென்று கேட்டால், இரட்டை லிங்கம் என்பது மனிதனின் இரண்டு கண்களை குறிக்கும் இடமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது மனிதனின் விந்துவை வாசி என்கின்ற கண்ணிற்கும், வாசி என்கின்ற கண்ணிலிருந்து பிரம்ம ரந்திரம் என்கின்ற கண்ணிற்கும் எடுத்து செல்லும் இரகசியம்தான் இரட்டை லிங்கமாகும். இன்னும் சொல்லப்போனால் ஜீவசமாதியின் இரகசியம்தான் இரட்டை லிங்கமாகும்.  

    அதில் ஒன்று ஜீவன் என்றும், மற்றொன்று பிரம்ம ரந்திரம் என்றும் வைத்துக் கொள்ளலாம். ஜீவனை பிரம்ம ரந்திரத்துக்குள் செலுத்துவதுதான் இரட்டை லிங்கத்தின் மகிமையாகும். எனவே சித்த வித்தை வித்யாதிரிகள் என்று சொல்பவர்கள் இரட்டைலிங்கம் முன் அமர்ந்து ஓம்கார மௌனம் தவத்தை ஒரு மண்டலம் அல்லது இரண்டு மண்டலம் அல்லது பல வருடங்கள் கடைபிடித்து வந்தால் சட்டைமுனி நாதரின் அருளால் அவனுக்கு ஜீவசமாதி நிலை கொடுக்கப்படும் என்பது சட்டைமுனி நாதரின் சத்திய வாக்காகும்.  
 
    அகத்தியரின் தவபீடமான நாவல் ஊற்று என்கின்ற நாவல் கிணறு என்பது விந்துவை மணியாக மாற்றும் இடமாகும். நா என்ற அட்சரம் நாதத்தைக் குறிக்கும். என்ற அட்சரம் விந்துவை குறிக்கும். ல் என்றால் நாதத்தை விந்துவாக மாற்றும் அட்சரத்தைக் குறிக்கும்.

    கி என்றால் விந்துவை ரசத்துடன் இணைத்து என்கின்ற சகஸ்ர லிங்கத்தில் மணியாக மாற்றி, று என்கின்ற பிரம்ம ரந்திரத்தின் ரசமணி கதவை திறந்து, அந்த விந்தானது, பிரம்ம ரந்திரத்திற்குள் ரசமணியாக மாறும் இரகசியம்தான் நாவல் கிணறு என்கின்ற இடத்தின் அட்சர ரகசியமாகும். எனவே அந்த இடத்தில் ஒருவன் தொடர்ந்து அமர்ந்து அகத்தியரை மானசீக குருவாக பாவித்து என்னுடைய விந்துவை பிரம்ம ரந்திரத்தில் ரசமாக மாற்றிவிடுங்கள் என்று தொடர்ந்து ஒரு மண்டலமாவது தவம் செய்தால் அவனுடைய விந்தானது ரசமணியாக மாறிவிடும். இதுவும் ஜீவசமாதி நிலையை கொடுக்கக்கூடிய ஒரு நிலைதான் என்றாலும் அதன்பிறகு அகத்தியர் அவனுக்கு வழி காட்டுவார்.  

   தவசிப் பாறை என்பதில் என்பது விந்து, என்பது ரசம். விந்துவையும் ரசத்தையும் இணைத்து சி என்கின்ற ஜீவனின் விந்து கதவைத் திறந்து, அதனை முப்புவாக  மாற்றி, ப் என்கின்ற ஜீவனின் துருசு கதவைத் திறந்து, அதை முப்பு முடிக்கும் துருசுவாக மாற்றி, பா என்கின்ற சகஸ்ரலிங்கத்தின் நாதம் கதவு திறந்து, துருசுவாகிய விந்துவை அதனுடன் இணைத்து நாதமணியாக்கி, றை என்கின்ற பிரம்ம ரந்திரத்தின் நாதமணி கதவு திறந்து பரிபூரண யோக தன்மைக்கு கொண்டு செல்வதே தவசிப்பாறை என்கின்ற இடத்தின் அட்சர ரகசியமாகும்.

    எனவே ஒருவன் சித்தர் மார்க்கத்தில்  சித்தராகவும் மாறலாம். மேலும் சித்தர் நிலை கடந்து யோகி நிலையையும் அடையலாம் என்பது சதுரகிரி மலையின் இரகசியமாகும். ஆயினும் இந்த மலை பகுதியில் இந்த மூன்று இடங்கள்தான் சித்த வித்தை குறிக்கும் இடங்கள் என்று குறிப்பிட்டுள்ளோம். ஆனாலும் இந்த மலையில் பல இடங்கள் அட்சர உபதேசம் இடங்களாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இறைவன் மார்கத்தில் அல்லது சித்தர் மார்கத்தில் இன்னும் பல மார்க்கத்தில் செல்ல எண்ணுபவர்களுக்கு பல இடங்கள் இந்த மலையில் உள்ளது.

Thursday, 26 November 2015

சிதம்பர ரகசியம் என்றால் என்ன?


சிதம்பர ரகசியம்
                                                
     இறைவனின் கருணையால் இறைவனின் லோகத்தில் இருக்கக்கூடிய இறைவனின் ரகசிய ஓலைச் சுவடி கதவு திறந்து, இந்த தமிழ்நாட்டில் பிரதான சிவன் ஆலயங்கள் என்று பல ஆலயங்கள் உண்டு. ஆயினும் இந்த அண்ட சராசரத்தைக் காக்கும் ஆலயமாக இறைவனால் நிர்ணயக்கப்பட்டு விளங்குவது சிதம்பரம் நடராஜர் ஆலயமாகும்

    இந்த ஆலயத்தினுள்ளே சிதம்பர ரகசியம் என்று சொல்கின்ற ஒரு கருப்பு நிற இயந்திரத்தை மக்கள் கண்டிருப்பார்கள். ஆனால் அது சிதம்பர ரகசியம் இயந்திரம் இல்லை. அது காலபோக்கில் அங்கு ஒரு செப்பு தகடு, சிவாச்சாரியர்களால் எழுதப்பட்ட இயந்திரம் வைக்கப்பட்டுள்ளன. உண்மையான சிதம்பர ரகசியம் என்பது இறைவனின் அருளால் இப்போது நாங்கள் வெளிப்படுத்துகின்றோம் அல்லது அதற்கான காலகட்டம் வந்துவிட்டது என்பதால் இறைவன் அருளால் அந்த இரகசியத்தை வெளிபடுத்துகிறோம்

   இன்றைக்கு இருக்கக் கூடிய மானிடர்கள் நம்புவார்களாமாட்டார்களா? என்றால் அது இறைவனுக்கே வெளிச்சம். நடராஜர் சந்நிதி எங்கு கண்டுகொண்டிருக்கின்றீர்களோ அதற்கு நேர் கீழாக 27 அடி ஆழத்தில் ஸ்படிகத்தால் ஆன பல ஜோதி ஒளி மின்காந்தம் கற்கள் வைக்கப் பட்டுள்ளது. அந்த ஜோதி ஒளி மின்காந்தம் கல்லைச் சுற்றி ஒளி அலைகளை தாங்கிப்பிடிக்கக் கூடிய சில கற்களும் வைக்கப்பட்டுள்ளன.

    அதுமட்டும் இல்லாமல் ஒளி அலைகளை தாங்கி பிடிக்கக் கூடிய அந்த கற்கள், எவ்வாறு வேலை செய்யவேண்டும் என்றும் சில ரகசிய கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன. அந்த ரகசிய கருவிகளின் வேலை என்னென்றால் அது ஒவ்வொரு கோள்களையும் அதன் வட்டப்பாதையில் இருந்து கீழே விழாதபடி, மேலே செல்லாதபடி, ஒரே சீராக இயங்கும்படி கட்டளை தருவதுதான் அதன் சிறப்பு அம்சமாகும்.  

    அவ்வாறிருக்க அந்த பூமியை தாங்கிபிடிக்கக் கூடிய மற்றொரு ஸ்படிக ஜோதி ஒளி மின்காந்தம் கற்கள் மற்றும் அதனின் ரகசிய கருவிகள் சிவகாமி அம்மையின் பாதத்தில் இருந்து 27 அடிக்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதை குறிக்கத்தான் அங்கே சில வடிவங்கள் அதாவது கோலங்கள் நடராஜர் சந்நிதியின் எதிர்புறமும், சிவகாமி அம்மையின் நுழைவாயிலிலும் போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனின் அர்த்தம் புரியாமல் போனதால்தான் தமிழ்நாட்டில் உள்ள இந்த சிறப்பை மனிதர்கள் மறந்து, மேற்கத்திய கலாச்சாரம்தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகின்றார்கள்.

மேலும் புவியின் காந்த புலத்தின் மையம் நடராஜரின் கால் பாதத்தின் கீழ் அமைந்துள்ளதாக சமீபத்தில் நாசா அறிவித்தது. அந்த சிதம்பர ரகசியத்தை அவர்கள் அறிய லட்சம் வருடங்களாவது ஆகும். அதாவது மனிதன் இதை அறிய லட்சம் வருடங்கள் ஆனாலும் ஆகலாம்.

Tuesday, 24 November 2015

சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தர்கள் என்பவர்கள் யார்?   
    சித்தர்கள் என்பவர்கள்  குறைந்த பட்சம் 12 வருடம் நிஷ்டையில் அதாவது கண்களை திறந்து இறைவனின் ஓம்காரம் மௌனம் ஜோதியை தர்சித்து கொண்டு வாழ்ந்தவர்கள்தான் சித்தர்கள். இது மட்டும் சித்தர்கள் தன்மையை தந்துவிடுமா? என்றால் தந்துவிடாது.  

  மேலும் விந்துவை ரசமணியாக மாற்றி அந்த ரசமணியை குண்டலினியுடன் இணைத்து, அந்த குண்டலினியை சகஸ்ர லிங்கத்துடன் இணைத்து, அந்த சகஸ்ர லிங்கத்தை பிரம்ம ரந்திரத்துடன் இணைத்து, அந்த பிரம்ம ரந்திரத்தை வாசியுடன் இணைத்து வைத்திருப்பவனே சித்தனாவான். இந்த நிலைக்கு அல்லது ரகசியத்தின் பெயர்தான் சித் என்கின்ற எழுத்தின் ரகசியமாகும். சித்தன் என்று அழைக்கக்கூடிய அவனுக்கு வாசி ஆதாரம் பரிபூரணமாக அடங்கி இயங்காமல், அவன் எப்போது நினைக்கின்றனோ அப்போது இயங்கும் நிலைக்கு வந்துவிடும்.  

   எனவே சித் என்கின்ற ஒளியை, சித் என்கின்ற ஜோதி, சித் என்கின்ற ஜோதிஒளியை, சித் என்கின்ற மின் காந்த ஜோதி ஒளியை, சித் என்கின்ற மின் காந்த ஜோதி ஒளி தவ ஒளியை தனது வாசியில் பிராணபிரதிஷ்டை எவன் செய்கின்றானோ அவனே சித்தன். அந்த சித்தனிடம் வந்தால் நம் நோய்கள் சரியாகிவிடும் என்று கற்பனை கோட்டை கட்டி, அவனை நோக்கி வருகின்றார்கள்.  

    ஆனால் அந்த சித்தன் என்ன செய்வான்? அந்த சித்தன் இறைவனின் பித்தன், இறைவனின் பைத்தியம். இறைவனின் தவசி, இறைவனின் தூதுவன். அவன் இறைவனை நாடுவான், இறைவன் என்ன கூறுவார் மகனே அவன் பாவி, அவன் செய்த பாவங்களின் கர்மவினையை அனுபவிக்கும் காலகட்டம் இது என்றும், இல்லையென்றால் அந்த பாவத்திற்காக அவன் மீண்டும் பிறவியெடுப்பான் என்றும் இறைவன் கூறுவார்.  

    ஆனால் மனிதர்களோ நான் நன்றாக இருக்க வேண்டும். எனது ஆசை அனைத்தும் நிறைவேற வேண்டும், நான் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நான் நிறைய சம்பாதிக்கவேண்டும் என்றும் மிக பெரிய வீடு, கார் வேண்டுமென்றும் என்றும், இன்னும் நிறைய வேண்டுமென்றும், நிறைய நல்லதை மட்டும் கேட்பார்களே தவிர கஷ்டங்களோ அல்லது நான் இந்த பிறவியோடு நான் செய்த கர்மவினைகளை அனுவிபத்து முடித்து விடுகின்றேன் இறைவா என்று யாரும் கேட்பதில்லை.  

     சித்தர் தவ பீடம் என்பது மனிதர்களின் பிரச்சனைக்கு தீர்வு தரும் என்றாலும் மனிதனின் கர்மவினை ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதால் அந்த கர்மவினையை முழுமையாக அகற்றதான் நாங்கள் முயற்சி செய்வோம். ஒரு மனிதன் இயற்கையாக கர்மவினைகளை அழிக்க முடிவு செய்தானென்றால் அவன் இந்த பூமியில் உள்ள சிவன் ஆலயங்களுக்கு பாத யாத்திரையாக நடந்து செல்ல வேண்டும்.  

     அவ்வாறு செல்லுவதால் என்ன நன்மை நிகழ்கின்றதென்றால், அவன் நடந்துச்செல்லும் போது பல இன்னல்களையும், துன்பங்களையும், கஷ்டங்களையும், பல இயற்கை உபாதைகளையும் சந்திப்பான். அதனால் அவனின் பாவங்கள் குறையும். இவ்வாறு அவன் பல ஆலயங்கள் செல்லச்செல்ல அவனின் பாவங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு சிவாலயத்தில் முழுமையாக எரிக்கப்பட்டுவிடும்

   இதற்காகதான் நாங்கள் மனிதர்களை குறைந்த பட்சம் 108 அல்லது 1008 சிவாலயங்கள் என்று ஸ்தல யாத்திரை மூலம் செல்லுங்கள் என்று கூறுகின்றோம். ஆனால் மனிதர்கள் படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற கருத்துக்கேற்ப படிப்பது திருமுறை, படிப்பது தேவாரம், படிப்பது சிவபுராணம் என்று சொல்லிக் கொண்டு சிவாலயங்களுக்கு செய்யக்கூடிய தொண்டுகளை மறந்து விட்டார்கள்.  

   அதனால் தான் மனிதர்கள் சிவாலயங்கள் சென்று என்ன செய்ய வேண்டும் என்று மறந்துவிட்டார்கள். அதை இப்போது உரைக்கின்றோம். ஒரு மனிதர் சிவாலயம் செல்லும் போது அன்று அந்த மனிதனின் ஜென்ம நட்சத்திரமாக இருக்கவேண்டும். காரணம் அந்த மனிதன் செல்லும் எந்த சிவாலயமாக இருந்தாலும் அந்த மனிதனின் ஜென்ம நட்சத்திரத்துடன் அந்த சிவாலயத்தில் உள்ள லிங்கம் இணைய ஆரம்பிக்கும். அவ்வாறு இணையும் போது அந்த மனிதன் அந்த லிங்கத்தை பார்த்து

   உதாரணமாக தனக்கு ஆரோக்கியம் தேவை என்றால் அவன் என்ன கேட்கவேண்டும்? ஆரோக்கியமான உயிர், உடல் தவஒளி எனக்கு வேண்டும் என்று கேட்கவேண்டும். அவனுக்கு எத்தனை முறை கேட்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படும்? அதற்கு குறைந்தபட்சம் 1008 முறை, அதிகபட்சம் லட்சத்து எட்டு முறை கேட்கவேண்டும் என்பது எங்களின் பதில். வழிதான் எங்களால் காட்டமுடியுமே தவிர முயற்சி அவன் அவனுடையது.

Tuesday, 13 October 2015

திருவள்ளுவர் & திருக்குறள் பற்றிய அரிய தகவல்கள்

   திருக்குறள் எனும் வார்த்தையிலுள்ள அட்சரங்களில் தி என்றால் ஜோதி என்று பொருள், ரு என்றால் வெட்டவெளியில் என்று பொருள், க் என்றால் ஆன்மா என்று பொருள், கு என்றால் ஆன்மாவுடன் தொடர்புள்ள குண்டலினி. 

   அந்த குண்டலினியை இயக்கக்கூடிய வாசி, வாசியை இயக்கக்கூடிய காற்று மண்டலம், காற்று மண்டலத்தை இயக்கக் கூடிய பஞ்சபூத மண்டலம், பஞ்சபூத மண்டலத்தை இயக்கக் கூடிய இயற்கை மண்டலம், இயற்கை மண்டலத்தை இயக்கக் கூடிய பிரபஞ்ச மண்டலம், பிரபஞ்ச மண்டலத்தை இயக்கக் கூடிய அண்ட மண்டலம், அண்ட மண்டலத்தை இயக்கக் கூடிய அருட்பெருஞ்ஜோதி மண்டலம், அருட்பெருஞ்ஜோதி மண்டலத்தை இயக்கக் கூடிய இறைவன் மண்டலம், இறைவன் மண்டலத்தை இயக்கக் கூடிய ஆதி மண்டலம், ஆதி மண்டலத்தை இயக்கக் கூடிய ஆதி நடராஜர் என்று தவசிகளால் போற்றப் படக்கூடிய ஈசனின் நடன மண்டலம்

   அப்பேர்ப்பட்ட ஈசனின் நடன மண்டலம் ஒருவன் அடைவதற்காக எழுதப்பட்ட நூல்தான் இன்றைக்கு மனிதர் திருக்குறள் என்று கூறக்கூடிய நூலாகும். ஈசனின் நடன மண்டலத்தை அடைந்த பல சித்த புருஷர்கள் இருப்பினும் அந்த ஈசனின் நடன மண்டலத்தை காணவேண்டுமென்று பல தவசிகள் கடும் தவத்தில் இன்றைக்கும் உள்ளார்களப்பா.  

   அந்த ஈசனின் நடன மண்டலத்தை அடையவேண்டி நான்கு யுகங்கள் கடும் தவம் செய்து, ஈசனின் நடன மண்டலத்தை கண்ணால் கண்ட மாபெரும் தவசி புருஷர்தான் இன்றைக்கு மக்கள் அழைக்கக்கூடிய திருவள்ளுவர் என்கின்ற தவசி சித்தன், தவசி முனிவர், தவசி ரிஷி, தவசி சொரூப ஆண்டவர், தவசி சொரூப இறைவன், தவசி ஆதி, தவசி சொரூப ஈசன் என்ற பல நிலைகளை கடந்து தவசி சொரூப ஓம்கார மௌன ஈசன் நிலையை இப்பொழுது அடைந்துள்ளாரப்பா

   எனவே இவ்வளவு நிலைகளையும் அடைந்தாக வேண்டுமா? என்று மனிதர்கள் வியப்பாக பார்க்கலாம். ஆனால் இவையெல்லாம் எப்போது சாத்தியமாகும் என்றால் அகரத்தை யார் ஒருவன் வாசியில், அகரத்தை யார் ஒருவன் குண்டலினியில், அகரத்தை யார் ஒருவன் பிரம்ம ரந்திரத்தில், அகரத்தை யார் ஒருவன் ஜீவனில், அகரத்தை யார் ஒருவன் ஆன்மாவில், அகரத்தை யார் ஒருவன் சகஸ்ர லிங்கத்தில்,

    அகரத்தை யார் ஒருவன் சாலை லிங்கத்தில், அகரத்தை யார் ஒருவன் அணுகளில், அகரத்தை யார் ஒருவன் மூச்சாக, அகரத்தை யார் ஒருவன் சுவாசமாக, அகரத்தை யார் ஒருவன் உணர்ந்துகொள்கின்றானோ, அகரத்தை யார் ஒருவன் புரிந்துகொள்கின்றானோ, அகரத்தை யார் ஒருவன் பிடித்து கொள்கின்றானோ, அகரத்தை யார் ஒருவன் அடக்கிக்கொள்கின்றானோ, அகரத்தை யார் ஒருவன் அறிந்து கொள்கின்றானோ,  

   அகரத்தை யார் ஒருவன் கற்றுக்கொள்கின்றானோ, அகரத்தை யார் ஒருவன் ஒத்துக் கொள்கின்றானோ, அகரத்தை யார் ஒருவன் ஏற்றுக்கொள்கின்றானோ, அகரத்தை எப்போதுமே இறைவனாக கருதி, இறைவன்தான் அகரம்.  

   அகரம் தவிர நாம் தெரிந்து கொள்ளவேண்டியது இந்த உலகத்தில் வேறு எதுவுமில்லை என்று, எதை அறிந்தால் வேறு எதையும் அறிந்து கொள்ள வேண்டாம் என்று அகத்தியர் தன் பரிபாஷை பாடல்களில் பல சீடர்களுக்கு உபதேசம் செய்ததை தான் இப்போது யாம் வெட்டவெளிச்சமாக கூறுகின்றோம்

  எதை தெரிந்துகொண்டால் வேறு எதையும் தெரிந்துக் கொள்ளவேண்டாமா? என்று, எதை என்று உச்சரிக்கும் பொழுது அகரம் என்கின்ற வார்த்தையின் உட்பொருள்தான் என்று அறிந்த ஒன்று. அந்த அகரத்தை ஒருவன் புரிந்து கொண்டால் வேறு எதையும் புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  

   அப்பேர்ப்பட்ட அந்த அகரத்தை எவ்வாறு கையாள வேண்டுமென்று 1330 அத்தியாங்களாக பிரிக்கப்பட்டதுதான் திருக்குறளாகும். ஆனால் வார்த்தை தமிழில் அதனின் அர்த்தத்தையும், செயலாக்கத்தையும்தன்மையையும் மாறி, மானிடர்கள் தான் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டது மட்டும் அல்லாமல் அதை ஒரு பாட நூலாக வைத்துக்கொண்டு, அதற்கு பரீட்சை என்ற பெயரில் ஒரு தேர்வையும் வைத்துக்கொண்டு, அப்பரீட்சையில் மதிப்பெண் பெறவேண்டும் என்ற தவறானக் கருத்தை மாணவனிடம் திணித்து, அந்த மாணவனையும் அந்த கருத்தை உள் வாங்கும்படி செய்து, அந்த மாணவனுக்கு இவர்கள் செய்ததுதான் மிக பெரிய துரோகமாகும்.

   எனவே திருக்குறளின் உட்கருத்துக்களை கூறக்கூடிய காலம், ஆடி பௌணர்மி பின்னர் இறைவனின் அனுமதியால் அனைத்து குறள்களுக்கும் அதாவது அனைத்து அத்தியாங்களுக்கும் நூலில் எழுதும் படியான விளக்கம் உமக்கு கொடுக்கப்பட்டுமப்பா. ஒரு மனிதனின் அணு சித்த தன்மைக்கு அதாவது சித்தர் தன்மைக்கு மாறாமல், அவன் அகரத்தை பிடிப்பது என்பது சாத்தியமே இல்லை
 

   ”அகரமுதல எழுத்தெலாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்ற குறளுக்கு திருவள்ளுவர் எழுதிய மெய்யான கருத்து, 

   அகரம் இல்லாத இடம் இந்த அண்டத்தில் உள்ளது என்றால் எதுவுமில்லையப்பா. அகரம் படிக்காத ஒருவன் சவத்திற்கு சவம். அகரம் இல்லாத ஓர் எழுத்து, அந்த எழுத்துகளே இல்லை என்பதுதான் எமது கருத்தாகும்.  

   அகரம் இல்லாத உணவு உணவேயில்லை என்பதுதான் உணவின் ராஜாவாகிய அட்சய பாத்திரம் கூறுகின்றது. அகரம் இல்லாத மூலிகைகளே இல்லையப்பா. அகரம் இல்லாத மலைகளே இல்லையப்பா. அகரம் அடையாத தவசியே தவசி லோகத்தில் இல்லையப்பா

   அகரம்தான் நான்கு வேதங்களாக பிரிந்துள்ளது. என்றால் யஜுர் வேதமாகவும், என்றால் சாம வேதமாகவும், என்றால் ரிக் வேதமாகவும், ம் என்றால் அதர்வண வேதமாகவும் நான்கு வேதமாக பிரிந்து, இந்த நான்கு வேதங்களையும் இணைக்கக் கூடிய ஒரே வேதம் இந்த அண்டத்தில் உள்ளதென்றால் அது அகரம் வேதம் மட்டும்தான். எனவே அகரம் வேதம் என்ற ஒரு நூலையும் வருகின்ற ஐப்பசி பௌர்ணமி அன்று உமக்கு உபதேசம் செய்யச்செய்ய நீ இந்த உலகத்திற்கு எழுதுவாய் என்று கூறுகின்றார்.

    இறைவனின் அகரம் குருகுலம் குருவாகிய வசிஷ்ட மகரிஷியின் பாதத்தை வணங்கிஅகரமுதல எழுத்தெலாம் ஆதி பகவன் முதற்றே உலகு” - என்று எழுதிய திருவள்ளுவர், இப்போதிங்கே அதற்கு உண்டான விளக்கத்தையே அல்லது மனிதர்கள் கூறுகின்றார்களே உரையை இப்பொழுது உனக்கு உபதேசம் செய்கின்றாரப்பா.

    இந்த உபதேசத்தை சித்த வேதம் நூலில் நீ எழுதவேண்டும் என்று விருப்பப்படுவதால், எழுதலாம் ஆயினும் யாம் கூறிய ஆடி பௌர்ணமி பின்னர் திருக்குறளுக்குண்டான அனைத்து அத்தியாயங்களும் உமக்கு விரிவாக கொடுக்கப்படும் என்பதை மறவதே. எனவே இந்த விளக்கத்தை நீ சுருக்கமான விளக்கமாக நீ எடுத்துக்கொள். ஆனால் இது மெய்யான விளக்கமும் என்று வைத்துக்கொள்.  

   அகரம் மனித உடம்பில் எங்கே உள்ளதென்றால் கால் நகத்திலிருந்து தலை முடிவரை அ என்கின்ற அட்சரத்தில் அடங்கியுள்ளதப்பா. அந்த என்கின்ற அட்சரம் கதவு மூடியுள்ளதால்தான் மனிதர்கள் இறைவனை அடைய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் மாபெரும் உண்மை. எனவே அகரம் என்கின்ற வார்த்தையில் எழுத்து கதவு மூடியுள்ளதால், அ என்கின்ற அட்சர கதவு மூடியுள்ளதால், கரம் என்கின்ற திரைகதவு பரிபூரணமாக வேலை செய்து வருகின்றது

   அந்த கரம் என்கின்ற திரைகதவை குருவின் அனுமதியோடு யார் ஒருவன் நீக்கி விடுகின்றானோ, அவன் மூலதாரம் என்று சொல்லக்கூடிய மூ என்கின்ற திரையை எரித்து விடுவான். என்கின்ற விந்துதிரையையும் எரித்து விடுவான். நா என்கின்ற நாத திரையையும் எரித்துவிடுவான்.  

   இந்த மூன்று திரைகளையும் எரித்தவனுக்கு வே என்கின்ற ஜோதிர்லிங்கம் மூலதாரத்தில் வந்து சேருமப்பா. அப்போது லு என்கின்ற ஜோதி அந்த மூலதாரத்திற்கு கிடைக்குமப்பா. அவ்வாறு கிடைத்தப் பின்னர் த் என்கின்ற நெற்றிக்கண்ணில் அந்த ஜோதியானது பிரகாசமாக எரியுமப்பா. தெ என்கின்ற ஞானம் கண் நெற்றிக்கண்ணில் திறக்குமப்பா.

    அவ்வாறு திறந்த பின்னர் ல் என்கின்ற ஆகாயத்தின் காயகற்பம் அவனுக்கு கிடைக்குமப்பா. அதை ல என்கின்ற காரண உடலும், காரண உயிரும் எடுத்துக்கொண்டு, ஸ்தூல உயிருடனும், ஸ்தூல உடலுடனும் இணைந்து சூட்சும உடலும், சூட்சும உயிரும், ஓம்காரம் மௌனம் சூட்சும உடலாகவும், ஓம்காரம் மௌனம் சூட்சும உயிராகவும் மாறும். இதைத்தான் மகரத்தை வேரருக்கும் ரகசியம் ம் என்று குறிப்பிட்டுள்ளோம்

   எனவே அவ்வாறு சூட்சும உடலும், சூட்சும உயிரும் ஓம்காரம் மௌனம் சூட்சும உடலாகவும், ஓம்காரம் மௌனம் சூட்சும உயிராகவும் மாறுபோது ஆதி பகவன் உலகத்திற்கு அவன் செல்லக்கூடிய வாய்ப்புண்டு என்று கருதுவதுதான் இந்த யாம் எழுதிய திருக்குறளின் முதல் குறளின் முதல் வாக்கியத்தில் இன்னும் சொல்லப்போனால் முதல் வரியின் எழுத்துக்களின் அட்சரங்களின் ரகசியங்கள்.

    யாரொருவன் குறைந்தபட்சம் ஒரு யுகமாவது கடுந்தவம் செய்து இறைவனிடம் உபதேசமாக வாங்கிருக்கின்றனோ அவனால் மட்டுமே யாம் கூறிய எழுத்துக்களை யாம் கூறிய வழிமுறையில் புரிந்து கொண்டு விளக்கத்தை தரமுடியுமே தவிர,  

   அதை விட்டுவிட்டு அகரம் என்பது அதுவென்றும், இதுவென்றும் தமிழில் ஒரு குறிப்பிட்ட பாடதிட்டத்தை படித்து முடித்துவிட்டு, தமிழில் நான் ஆசிரியர் என்று மானிடர்கள் அற்ப பொருளுக்காக கூறி கொண்டிருக்கின்றார்களே 

  அல்லது தமிழ் இலக்கியமாக தொல்காப்பியத்தின் வரைமுறையை வகுத்துக் கொண்டு, தொல்காப்பியத்தினை நெறிமுறையாகக் கொண்டு, தொல் காப்பியத்தினை நெறிமுறையாக, வரைமுறையாக உட்கருத்தைக் கொண்டு, அந்த உட்கருத்திற்கு ஏற்ப பொருளுரைத்து, அப்பொருளால் சமுதாயத்தை சீர் கெடுத்தது மட்டுமல்லாமல், இவைகளை எல்லாம் யார் செய்துவருகின்றார்களோ அவர்களெல்லாம் பாவியாவர்கள் என்பதுதான் இறைவன் வாக்காகும் எமது வாக்காகும்

   ஏனென்றால் ஒரு மொழியின் உட்கருத்து அல்லது உட்வடிவம் யார் கொடுத்தார்களோ அதை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் அந்த மொழியை பேசவேண்டும் என்பது நியதியாகும். ஆனால் மனிதர்கள் அந்த மொழியின் இலக்கணத்தை மாற்றி வைத்து விட்டு இன்னும் சொல்லப்போனால் தமிழ்மொழியின் அர்த்தம் தெரியாமல், தமிழ் எழுத்துக்களின் அர்த்தம் தெரியாமல் தமிழ் மொழியின் வார்த்தைக்குரிய அர்த்தத்தை வைத்துக் கொண்டு, இன்றைக்கு திருக்குறளானது இதைதான் கூறுகின்றது என்று நடை முறையில் வைத்துக் கொண்டிருக்கின்றார்களே, இவர்களை எல்லாம் எங்கே கொண்டுபோய் சேர்ப்பது

   மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் திருக்குறள் மட்டுமல்ல, தொல்காப்பியத்திற்கு முன்னால் எத்தனை நூல்கள் தோன்றியது, அத்தனை நூல்களுக்கும் பொய்யான உரையை, பொய்யான கருத்தை எழுதி தமிழ் மொழியை கொலை செய்துவிட்டார்கள், தமிழ் மொழியை சாகடித்து விட்டார்கள், தமிழ் மொழியை செத்துபோகச் செய்துவிட்டார்கள். மேலும் வள்ளுவரின் சொரூப நிலை தவ பீடத்திற்கு ஆடி பௌர்ணமியன்று செல். அது எங்கே உள்ளது என்று உனக்கு மட்டும் ரகசியமாக சித்ரா பௌர்ணமி பின் காட்டப்படும்.