சித்தவித்தை

இறைவன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பாம்பாட்டி சித்தர், சித்தர் திருமூலர் கருணையால், அருளால் உபதேசிக்கப்பட்ட சித்தவித்தை உபதேசங்கள். சப்தரிஷிகளால் மானிடர்களுக்கு நேரடியாக உபதேசிக்கப்பட்ட கலைதான் சித்தவித்தை. இந்த உபதேசங்களை சித்தவித்தை அப்பியாசிகள் பயன்படுத்திக் கொள்ளவும், பயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆனால் மற்றவர்களுக்கு உபதேசமாக வழங்க எவ்வித அனுமதி கொடுக்கப்படவில்லை.

Tuesday, 13 October 2015

திருவள்ளுவர் & திருக்குறள் பற்றிய அரிய தகவல்கள்

   திருக்குறள் எனும் வார்த்தையிலுள்ள அட்சரங்களில் தி என்றால் ஜோதி என்று பொருள், ரு என்றால் வெட்டவெளியில் என்று பொருள், க் என்றால் ஆன்மா என்று பொருள், கு என்றால் ஆன்மாவுடன் தொடர்புள்ள குண்டலினி. 

   அந்த குண்டலினியை இயக்கக்கூடிய வாசி, வாசியை இயக்கக்கூடிய காற்று மண்டலம், காற்று மண்டலத்தை இயக்கக் கூடிய பஞ்சபூத மண்டலம், பஞ்சபூத மண்டலத்தை இயக்கக் கூடிய இயற்கை மண்டலம், இயற்கை மண்டலத்தை இயக்கக் கூடிய பிரபஞ்ச மண்டலம், பிரபஞ்ச மண்டலத்தை இயக்கக் கூடிய அண்ட மண்டலம், அண்ட மண்டலத்தை இயக்கக் கூடிய அருட்பெருஞ்ஜோதி மண்டலம், அருட்பெருஞ்ஜோதி மண்டலத்தை இயக்கக் கூடிய இறைவன் மண்டலம், இறைவன் மண்டலத்தை இயக்கக் கூடிய ஆதி மண்டலம், ஆதி மண்டலத்தை இயக்கக் கூடிய ஆதி நடராஜர் என்று தவசிகளால் போற்றப் படக்கூடிய ஈசனின் நடன மண்டலம்

   அப்பேர்ப்பட்ட ஈசனின் நடன மண்டலம் ஒருவன் அடைவதற்காக எழுதப்பட்ட நூல்தான் இன்றைக்கு மனிதர் திருக்குறள் என்று கூறக்கூடிய நூலாகும். ஈசனின் நடன மண்டலத்தை அடைந்த பல சித்த புருஷர்கள் இருப்பினும் அந்த ஈசனின் நடன மண்டலத்தை காணவேண்டுமென்று பல தவசிகள் கடும் தவத்தில் இன்றைக்கும் உள்ளார்களப்பா.  

   அந்த ஈசனின் நடன மண்டலத்தை அடையவேண்டி நான்கு யுகங்கள் கடும் தவம் செய்து, ஈசனின் நடன மண்டலத்தை கண்ணால் கண்ட மாபெரும் தவசி புருஷர்தான் இன்றைக்கு மக்கள் அழைக்கக்கூடிய திருவள்ளுவர் என்கின்ற தவசி சித்தன், தவசி முனிவர், தவசி ரிஷி, தவசி சொரூப ஆண்டவர், தவசி சொரூப இறைவன், தவசி ஆதி, தவசி சொரூப ஈசன் என்ற பல நிலைகளை கடந்து தவசி சொரூப ஓம்கார மௌன ஈசன் நிலையை இப்பொழுது அடைந்துள்ளாரப்பா

   எனவே இவ்வளவு நிலைகளையும் அடைந்தாக வேண்டுமா? என்று மனிதர்கள் வியப்பாக பார்க்கலாம். ஆனால் இவையெல்லாம் எப்போது சாத்தியமாகும் என்றால் அகரத்தை யார் ஒருவன் வாசியில், அகரத்தை யார் ஒருவன் குண்டலினியில், அகரத்தை யார் ஒருவன் பிரம்ம ரந்திரத்தில், அகரத்தை யார் ஒருவன் ஜீவனில், அகரத்தை யார் ஒருவன் ஆன்மாவில், அகரத்தை யார் ஒருவன் சகஸ்ர லிங்கத்தில்,

    அகரத்தை யார் ஒருவன் சாலை லிங்கத்தில், அகரத்தை யார் ஒருவன் அணுகளில், அகரத்தை யார் ஒருவன் மூச்சாக, அகரத்தை யார் ஒருவன் சுவாசமாக, அகரத்தை யார் ஒருவன் உணர்ந்துகொள்கின்றானோ, அகரத்தை யார் ஒருவன் புரிந்துகொள்கின்றானோ, அகரத்தை யார் ஒருவன் பிடித்து கொள்கின்றானோ, அகரத்தை யார் ஒருவன் அடக்கிக்கொள்கின்றானோ, அகரத்தை யார் ஒருவன் அறிந்து கொள்கின்றானோ,  

   அகரத்தை யார் ஒருவன் கற்றுக்கொள்கின்றானோ, அகரத்தை யார் ஒருவன் ஒத்துக் கொள்கின்றானோ, அகரத்தை யார் ஒருவன் ஏற்றுக்கொள்கின்றானோ, அகரத்தை எப்போதுமே இறைவனாக கருதி, இறைவன்தான் அகரம்.  

   அகரம் தவிர நாம் தெரிந்து கொள்ளவேண்டியது இந்த உலகத்தில் வேறு எதுவுமில்லை என்று, எதை அறிந்தால் வேறு எதையும் அறிந்து கொள்ள வேண்டாம் என்று அகத்தியர் தன் பரிபாஷை பாடல்களில் பல சீடர்களுக்கு உபதேசம் செய்ததை தான் இப்போது யாம் வெட்டவெளிச்சமாக கூறுகின்றோம்

  எதை தெரிந்துகொண்டால் வேறு எதையும் தெரிந்துக் கொள்ளவேண்டாமா? என்று, எதை என்று உச்சரிக்கும் பொழுது அகரம் என்கின்ற வார்த்தையின் உட்பொருள்தான் என்று அறிந்த ஒன்று. அந்த அகரத்தை ஒருவன் புரிந்து கொண்டால் வேறு எதையும் புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  

   அப்பேர்ப்பட்ட அந்த அகரத்தை எவ்வாறு கையாள வேண்டுமென்று 1330 அத்தியாங்களாக பிரிக்கப்பட்டதுதான் திருக்குறளாகும். ஆனால் வார்த்தை தமிழில் அதனின் அர்த்தத்தையும், செயலாக்கத்தையும்தன்மையையும் மாறி, மானிடர்கள் தான் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டது மட்டும் அல்லாமல் அதை ஒரு பாட நூலாக வைத்துக்கொண்டு, அதற்கு பரீட்சை என்ற பெயரில் ஒரு தேர்வையும் வைத்துக்கொண்டு, அப்பரீட்சையில் மதிப்பெண் பெறவேண்டும் என்ற தவறானக் கருத்தை மாணவனிடம் திணித்து, அந்த மாணவனையும் அந்த கருத்தை உள் வாங்கும்படி செய்து, அந்த மாணவனுக்கு இவர்கள் செய்ததுதான் மிக பெரிய துரோகமாகும்.

   எனவே திருக்குறளின் உட்கருத்துக்களை கூறக்கூடிய காலம், ஆடி பௌணர்மி பின்னர் இறைவனின் அனுமதியால் அனைத்து குறள்களுக்கும் அதாவது அனைத்து அத்தியாங்களுக்கும் நூலில் எழுதும் படியான விளக்கம் உமக்கு கொடுக்கப்பட்டுமப்பா. ஒரு மனிதனின் அணு சித்த தன்மைக்கு அதாவது சித்தர் தன்மைக்கு மாறாமல், அவன் அகரத்தை பிடிப்பது என்பது சாத்தியமே இல்லை
 

   ”அகரமுதல எழுத்தெலாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்ற குறளுக்கு திருவள்ளுவர் எழுதிய மெய்யான கருத்து, 

   அகரம் இல்லாத இடம் இந்த அண்டத்தில் உள்ளது என்றால் எதுவுமில்லையப்பா. அகரம் படிக்காத ஒருவன் சவத்திற்கு சவம். அகரம் இல்லாத ஓர் எழுத்து, அந்த எழுத்துகளே இல்லை என்பதுதான் எமது கருத்தாகும்.  

   அகரம் இல்லாத உணவு உணவேயில்லை என்பதுதான் உணவின் ராஜாவாகிய அட்சய பாத்திரம் கூறுகின்றது. அகரம் இல்லாத மூலிகைகளே இல்லையப்பா. அகரம் இல்லாத மலைகளே இல்லையப்பா. அகரம் அடையாத தவசியே தவசி லோகத்தில் இல்லையப்பா

   அகரம்தான் நான்கு வேதங்களாக பிரிந்துள்ளது. என்றால் யஜுர் வேதமாகவும், என்றால் சாம வேதமாகவும், என்றால் ரிக் வேதமாகவும், ம் என்றால் அதர்வண வேதமாகவும் நான்கு வேதமாக பிரிந்து, இந்த நான்கு வேதங்களையும் இணைக்கக் கூடிய ஒரே வேதம் இந்த அண்டத்தில் உள்ளதென்றால் அது அகரம் வேதம் மட்டும்தான். எனவே அகரம் வேதம் என்ற ஒரு நூலையும் வருகின்ற ஐப்பசி பௌர்ணமி அன்று உமக்கு உபதேசம் செய்யச்செய்ய நீ இந்த உலகத்திற்கு எழுதுவாய் என்று கூறுகின்றார்.

    இறைவனின் அகரம் குருகுலம் குருவாகிய வசிஷ்ட மகரிஷியின் பாதத்தை வணங்கிஅகரமுதல எழுத்தெலாம் ஆதி பகவன் முதற்றே உலகு” - என்று எழுதிய திருவள்ளுவர், இப்போதிங்கே அதற்கு உண்டான விளக்கத்தையே அல்லது மனிதர்கள் கூறுகின்றார்களே உரையை இப்பொழுது உனக்கு உபதேசம் செய்கின்றாரப்பா.

    இந்த உபதேசத்தை சித்த வேதம் நூலில் நீ எழுதவேண்டும் என்று விருப்பப்படுவதால், எழுதலாம் ஆயினும் யாம் கூறிய ஆடி பௌர்ணமி பின்னர் திருக்குறளுக்குண்டான அனைத்து அத்தியாயங்களும் உமக்கு விரிவாக கொடுக்கப்படும் என்பதை மறவதே. எனவே இந்த விளக்கத்தை நீ சுருக்கமான விளக்கமாக நீ எடுத்துக்கொள். ஆனால் இது மெய்யான விளக்கமும் என்று வைத்துக்கொள்.  

   அகரம் மனித உடம்பில் எங்கே உள்ளதென்றால் கால் நகத்திலிருந்து தலை முடிவரை அ என்கின்ற அட்சரத்தில் அடங்கியுள்ளதப்பா. அந்த என்கின்ற அட்சரம் கதவு மூடியுள்ளதால்தான் மனிதர்கள் இறைவனை அடைய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் மாபெரும் உண்மை. எனவே அகரம் என்கின்ற வார்த்தையில் எழுத்து கதவு மூடியுள்ளதால், அ என்கின்ற அட்சர கதவு மூடியுள்ளதால், கரம் என்கின்ற திரைகதவு பரிபூரணமாக வேலை செய்து வருகின்றது

   அந்த கரம் என்கின்ற திரைகதவை குருவின் அனுமதியோடு யார் ஒருவன் நீக்கி விடுகின்றானோ, அவன் மூலதாரம் என்று சொல்லக்கூடிய மூ என்கின்ற திரையை எரித்து விடுவான். என்கின்ற விந்துதிரையையும் எரித்து விடுவான். நா என்கின்ற நாத திரையையும் எரித்துவிடுவான்.  

   இந்த மூன்று திரைகளையும் எரித்தவனுக்கு வே என்கின்ற ஜோதிர்லிங்கம் மூலதாரத்தில் வந்து சேருமப்பா. அப்போது லு என்கின்ற ஜோதி அந்த மூலதாரத்திற்கு கிடைக்குமப்பா. அவ்வாறு கிடைத்தப் பின்னர் த் என்கின்ற நெற்றிக்கண்ணில் அந்த ஜோதியானது பிரகாசமாக எரியுமப்பா. தெ என்கின்ற ஞானம் கண் நெற்றிக்கண்ணில் திறக்குமப்பா.

    அவ்வாறு திறந்த பின்னர் ல் என்கின்ற ஆகாயத்தின் காயகற்பம் அவனுக்கு கிடைக்குமப்பா. அதை ல என்கின்ற காரண உடலும், காரண உயிரும் எடுத்துக்கொண்டு, ஸ்தூல உயிருடனும், ஸ்தூல உடலுடனும் இணைந்து சூட்சும உடலும், சூட்சும உயிரும், ஓம்காரம் மௌனம் சூட்சும உடலாகவும், ஓம்காரம் மௌனம் சூட்சும உயிராகவும் மாறும். இதைத்தான் மகரத்தை வேரருக்கும் ரகசியம் ம் என்று குறிப்பிட்டுள்ளோம்

   எனவே அவ்வாறு சூட்சும உடலும், சூட்சும உயிரும் ஓம்காரம் மௌனம் சூட்சும உடலாகவும், ஓம்காரம் மௌனம் சூட்சும உயிராகவும் மாறுபோது ஆதி பகவன் உலகத்திற்கு அவன் செல்லக்கூடிய வாய்ப்புண்டு என்று கருதுவதுதான் இந்த யாம் எழுதிய திருக்குறளின் முதல் குறளின் முதல் வாக்கியத்தில் இன்னும் சொல்லப்போனால் முதல் வரியின் எழுத்துக்களின் அட்சரங்களின் ரகசியங்கள்.

    யாரொருவன் குறைந்தபட்சம் ஒரு யுகமாவது கடுந்தவம் செய்து இறைவனிடம் உபதேசமாக வாங்கிருக்கின்றனோ அவனால் மட்டுமே யாம் கூறிய எழுத்துக்களை யாம் கூறிய வழிமுறையில் புரிந்து கொண்டு விளக்கத்தை தரமுடியுமே தவிர,  

   அதை விட்டுவிட்டு அகரம் என்பது அதுவென்றும், இதுவென்றும் தமிழில் ஒரு குறிப்பிட்ட பாடதிட்டத்தை படித்து முடித்துவிட்டு, தமிழில் நான் ஆசிரியர் என்று மானிடர்கள் அற்ப பொருளுக்காக கூறி கொண்டிருக்கின்றார்களே 

  அல்லது தமிழ் இலக்கியமாக தொல்காப்பியத்தின் வரைமுறையை வகுத்துக் கொண்டு, தொல்காப்பியத்தினை நெறிமுறையாகக் கொண்டு, தொல் காப்பியத்தினை நெறிமுறையாக, வரைமுறையாக உட்கருத்தைக் கொண்டு, அந்த உட்கருத்திற்கு ஏற்ப பொருளுரைத்து, அப்பொருளால் சமுதாயத்தை சீர் கெடுத்தது மட்டுமல்லாமல், இவைகளை எல்லாம் யார் செய்துவருகின்றார்களோ அவர்களெல்லாம் பாவியாவர்கள் என்பதுதான் இறைவன் வாக்காகும் எமது வாக்காகும்

   ஏனென்றால் ஒரு மொழியின் உட்கருத்து அல்லது உட்வடிவம் யார் கொடுத்தார்களோ அதை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் அந்த மொழியை பேசவேண்டும் என்பது நியதியாகும். ஆனால் மனிதர்கள் அந்த மொழியின் இலக்கணத்தை மாற்றி வைத்து விட்டு இன்னும் சொல்லப்போனால் தமிழ்மொழியின் அர்த்தம் தெரியாமல், தமிழ் எழுத்துக்களின் அர்த்தம் தெரியாமல் தமிழ் மொழியின் வார்த்தைக்குரிய அர்த்தத்தை வைத்துக் கொண்டு, இன்றைக்கு திருக்குறளானது இதைதான் கூறுகின்றது என்று நடை முறையில் வைத்துக் கொண்டிருக்கின்றார்களே, இவர்களை எல்லாம் எங்கே கொண்டுபோய் சேர்ப்பது

   மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் திருக்குறள் மட்டுமல்ல, தொல்காப்பியத்திற்கு முன்னால் எத்தனை நூல்கள் தோன்றியது, அத்தனை நூல்களுக்கும் பொய்யான உரையை, பொய்யான கருத்தை எழுதி தமிழ் மொழியை கொலை செய்துவிட்டார்கள், தமிழ் மொழியை சாகடித்து விட்டார்கள், தமிழ் மொழியை செத்துபோகச் செய்துவிட்டார்கள். மேலும் வள்ளுவரின் சொரூப நிலை தவ பீடத்திற்கு ஆடி பௌர்ணமியன்று செல். அது எங்கே உள்ளது என்று உனக்கு மட்டும் ரகசியமாக சித்ரா பௌர்ணமி பின் காட்டப்படும். 

Tuesday, 6 October 2015

சித்தர் காகபுஜண்டர்

சித்தர் காகபுஜண்டர்:

  சித்தனுக்கெல்லாம் சித்தன் என்று சித்தர்லோகத்தில் போற்றக்கூடிய மாபெரும் சித்தர் அவதாரம் காகபுஜண்டர். காகபுஜண்டருக்கு ஈடுயிணை இல்லாத சித்தன் என்ற பெருமையுண்டு. ஏனென்றால் வசிஷ்ட மகரிஷியால் சித்தர் திருமூலர் உருவானார். மற்ற ஏனைய  ரிஷிகளால் சித்தவித்தை உபதேசம் பெற்ற மாணவன்தான்  காகபுஜண்டர். ஆறு ரிஷிகளிடமிருந்து சித்தவித்தையை உபதேசமாக பெற்று இந்த பூமியிலுள்ள அனைத்து இடங்களிலும் கடும்தவம் புரிந்து, இறைவனை பார்க்க வேண்டுமென்றால் உடனடியாக பார்க்க்க்கூடிய ஒரு வரத்தையும் பெற்றுள்ளதால் சித்தர் திருமூலரை காட்டிலும் காகபுஜண்டர் ஒரு மிகபெரிய சித்தர் அவதாரம் என்று சித்தர் லோகத்தில் கூறுகின்றார்கள்.

   ஆயினும் பிரதான சித்தர், சித்தர் திருமூலர். அவரின் தலைமையின் கீழ்தான் உள்ளார் என்பது உண்மை. இறைவனை ஒரு சித்தர் பார்க்கவேண்டும் என்றால் அதற்கு பல வழிமுறைகள் உள்ளது. கடும்தவம் மேற்கொள்ள வேண்டும் என்ற நியதி உண்டு. ஆனால் இந்த நியதி எதுவுமில்லாமல் இறைவனை நேரடியாக காணும் வரத்தை இன்று வரை சித்தர் காகபுஜண்டர் ஒருவர் மட்டுமே பெற்று உள்ளார். வேறு எந்த சித்தருக்கும் கொடுக்கப் படவில்லை.  

   அந்த சித்தர் காகபுஜண்டர் அன்னை பகுளாதேவியுடன் இந்த பூமியில் இன்று மனிதர்களால் திருச்செந்தூர் என்று  அழைக்கப்படும் ஊரில் மானிட ரூபம் எடுத்து, எனக்காக ஒரு மானிடன் இந்த பூமியிலிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, விருப்பப்பட்டு, பகுளாதேவி அன்னையின் மூலமாக பூமியில் பிறந்தவர்தான் சந்திரசுவாமியாவர். மேலும் உரோமரிஷி, தனது குருகுல பீடத்தை திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கலியுகம் ஆரம்பிக்கும் முன்னரே உருவாக்கி வைத்திருந்தார்.

   அன்னை பகுளாதேவி, சந்திரசுவாமியை உரோமரிஷி குருகுல பீடத்தில் கலியுகம் ஆரம்பிக்கும் முன் சேர்த்துவிடுகின்றார். அப்பேர்ப்பட்ட சந்திர சுவாமி மானிட ஜென்மாக பிறந்தால் இன்னும் சொல்லப்போனால் சித்தர் காகபுஜண்டர் அன்னை பகுளாதேவி இருவரும் அவரை சித்தர் லோகம் வரவேண்டும் என்று ஆசிர்வாதம் செய்தார்கள், ஆனால் எந்த பிறவியில் வரவேண்டும் என்று ஆசிர்வாதம் மட்டும் செய்யாமல் சென்று விட்டார்கள். அதன் பயனாக இன்னும் சொல்லப்போனால் இது இறைவனின் திருவிளையாடலாக இருக்கலாம் என்று கூறி, அப்பேர்ப்பட்ட மாபெரும் சித்தரின் மகனாக பிறந்தவர்தான் சந்திரசுவாமி

  எனவே இன்றைக்கும் காகபுஜண்டரின், பகுளாதேவியின் தவ வலிமையும், தவ பார்வையும் தவ ஜோதிலிங்கமும் சந்திர சுவாமி என்ற விஜயகுமாரை சுற்றி காவல் காத்துக் கொண்டு வருகின்றது என்பது ஒர் உண்மை மிகபெரிய மெய்யான விஷயமாகும். எனவே அப்பேர்பட்ட சித்தரிடமிருந்து தோன்றியவர் சந்திரசுவாமி என்றாலும் மனிதரூபமாக இருப்பதால் பிற மனிதர்கள் போல் ஆசைப்பட்டு, வாழ்ந்ததால் இத்தனை பிறவிகள் வந்தது. இதில் இதை மட்டும் கூறிப்பிட்டால் போதும் ஆனது. மற்ற விஷயங்கள் மேல் நிலை உபதேசம் அல்லது திருமூலர் திருமந்திரத்தில் கூறிப்பிடுவோம் என்று கூறி முடிக்கின்றோம்